தாட்கோ மானியத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு – நாமக்கல்
தாட்கோ
மூலம் வழங்கப்படும் மானிய
திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என,
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா
சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக
அரசின், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை,
தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, பிவிசி பைப் வாங்க,
15 ஆயிரம் ரூபாய் மானியமாகவும், புதிய மின்மோட்டார் வாங்க,
10 ஆயிரம் ரூபாய் மானியமும்
வழங்குகிறது. விண்ணப்பதாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை
சார்ந்தவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம்,
2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல்
இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரர் ஜாதி மற்றும் வருமானச்சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, பட்டா, சிட்டா,
அடங்கல், ‘அ‘ பதிவேடு,
பாஸ்போட் சைஸ் போட்டோ,
நிலவரை படம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து
பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை,
ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ
இணையதள முகவரியான http://application.tahdco.com/ பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலம்.
பழங்குடியின விவசாயிகள், http://fast.tahdco.com
பதிவேற்றம் செய்யலாம். மேலும்
விபரங்களுக்கு, மாவட்ட
மேலாளர், தாட்கோ, மாவட்ட
கலெக்டர் அலுவலக வளாகம்,
நாமக்கல் (மொபைல் எண்:
94450 29508), அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


