நல அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி முப்படை நலத்துறையில் நல
அமைப்பாளர் பதவி ஒப்பந்த
அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு
நலத்துறையின் https://sainik.py.gov.in/ என்ற
வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்
தகுதி, மதிப்பூதியம், இறுதி
தேதி, விண்ணப்பம் உள்ளிட்ட
விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.
விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை பதிவுத்தபால் மூலம், இயக்குனர், முப்படை
நலத்துறை, புதுச்சேரி என்ற
முகவரிக்கு வரும் டிசம்பர்
3ம் தேதிக்குள் சமர்பிக்க
வேண்டும்.