Saturday, August 9, 2025
HomeBlogபுதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு

புதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு

 

Announcement of selection of new Vice Chancellor

புதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்ட
பல்கலை துணைவேந்தராக, சூர்ய
நாராயண சாஸ்திரி பணியாற்றுகிறார். பதவிக்காலம் இந்த ஆண்டு,
மார்ச் 21ல் முடிகிறது.
இதையொட்டி, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை
துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக, மூன்று பேர் அடங்கிய
தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.சென்னை உயர்
நீதிமன்ற ஓய்வு பெற்ற
நீதிபதி கலையரசன், திருச்சி
தேசிய சட்ட கல்லுாரியின் முன்னாள் துணைவேந்தர் கமலா
சங்கரன், அம்பேத்கர் சட்ட
பல்கலை முன்னாள் துணைவேந்தர் டார்வேஷ் ஆகியோர், தேடல்
குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான
கல்வியாளர்கள், தங்கள்
கல்வி தகுதி, ஆராய்ச்சி
மற்றும் அனுபவ விபரங்களை,
மார்ச் 1க்குள் அனுப்புமாறு தேடல் குழுவின் சார்பில்,
பொறுப்பு அதிகாரி அறிவித்துள்ளார். விபரங்களை http://www.tndalu.ac.in
என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments