தேசிய சித்த
மருத்துவ நிறுவனத்தில் பட்ட
மேற்படிப்பு கலந்தாய்வு அறிவிப்பு
தேசிய
சித்த மருத்துவ ஆராய்ச்சி
நிறுவனத்தில் நிகழாண்டுக்கான பட்ட மேற்படிப்பு மாணவா்
சோ்க்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதன்படி வரும் 21ம்
தேதி அதற்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ்
செயல்படும் தேசிய சித்த
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
தாம்பரத்தில் அமைந்துள்ளது. எம்.டி. சித்தா
பட்ட மேற்படிப்புக்கு இங்கு
58 இடங்கள் உள்ளன. அதில்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக
மீதமுள்ள இடங்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. அகில
இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று
கலந்தாய்வு வரும் 8ம்
தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை தேசிய சித்த
மருத்துவ நிறுவனம் வரும்
21ம் தேதி நடத்தவுள்ளது. அதனுடன் முனைவா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக தேசிய
சித்த மருத்துவ நிறுவன
இயக்குநா் டாக்டா் மீனா
குமாரி தெரிவித்தார்.
கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை
குறித்த விவரங்களை https://nischennai.org/main/ இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

