HomeBlogCBSE 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

Announcement of CBSE 10th, 12th Class General Examination Dates

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன.
அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.

புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.

ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2021-22) சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது.

இந்த சூழலில், இரண்டாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை இன்று மதியம் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. எனினும் அவ்வாறு வெளியான தகவல் போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

CBSE Class 10 Time Table: Click Here

CBSE Class 12 Time Table: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!