அண்ணா பல்கலைக்கழக Semester Time Table 2021 – தேர்வுகள்
மார்ச் 15 தேதி முதல்
தொடக்கம்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் மார்ச்
15 ஆம் தேதி முதல்
26 ஆம் தேதி வரை
நடைபெறும் என அண்ணா
பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன்
மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிசம்பர்
மாதம் 6 ஆம் தேதி
முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதன்பின்
பிப்ரவரி மாதம் 8 ஆம்
தேதி முதல் அனைத்து
இளங்கலை மற்றும் முதுகலை
மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. நேரடி
வகுப்பில் கலந்து கொள்ளாத
மாணவர்களுக்கு ஆன்லைன்
மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
உள்ள அனைத்து பொறியியல்
கல்லூரிகளிலும் முதலாம்
ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர்
தேர்வுகள் நடத்தப்படும் என
தெரிவித்துள்ளனர்.
இந்த
அறிவிப்பின் படி முதலாம்
ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள்
மார்ச் மாதம் 15 ஆம்
தேதி முதல் 26 ஆம்
தேதி வரை நடைபெறும்
என தெரிவித்துள்ளனர். மேலும்
இந்த தேர்வுகள் ஆன்லைன்
மூலமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம்
வீதம் நடைபெறும் என
பல்கலைக்கழகத்தின் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Anna University Time Table 2021: Click Here