கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆயினும் தொற்றின் பரவல் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் சமீபத்தில் இந்த ஊரடங்கினை தளர்வுகளுடன் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், சில மாவட்டங்களில் இன்னும் எண்ணிக்கை அதிகமாவே உள்ளது. எனவே அந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் :
இந்த பொது முடக்கத்தினால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த மறுதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த மறு தேர்வுகள் ஆனது வரும் 14.06.2021 அன்று முதல் தொடங்கி 10.07.2021 அன்று வரை நடைபெற உள்ளது.
அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Anna University Re-Exam Hall Ticket 2021: Click Here