
அணி இலக்கணம் முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
TNPSC மற்றும் அரசு தேர்வுகள் பற்றி தயாராகும் அனைவருக்கும் முக்கியமான அணி இலக்கணம் வினா-விடைகள் தொகுப்பை நான் இங்கு பகிர்ந்துள்ளேன். அணி இலக்கணம் குறித்த முக்கிய வினா மற்றும் விடைகள் உங்கள் தேர்வு தயாரிப்பில் மிகவும் உதவும்.
இதில், அணி இலக்கணம் பற்றிய சிக்கலான வினா-விடைகள் மற்றும் அவற்றின் விளக்கங்களை வழங்கப்பட்டுள்ளது, இது உங்களுக்கு TNPSC, SSC, மற்றும் ராஜிய அரசு தேர்வுகள் போன்றவற்றில் சிறந்த தேர்வு செயல்திறனை பெற்றுக்கொள்ள உதவும்.
இதில் உள்ள சிறப்பம்சங்கள்:
- 📘 அணி இலக்கணம் பற்றிய முக்கிய வினா-விடைகள்
- 📝 சிக்கலான கேள்விகளுக்கு விளக்கங்கள்
- 🎯 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிகள்
- 🏆 தேர்வு வெற்றி பெற உதவும் பயிற்சிகள்
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
விடைகள் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது
1) ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது _
அ) இயல்பு நவிற்சி அணி ஆ) தன்மை நவிற்சி அணி
இ) உயர்வு நவிற்சி அணி ஈ) அ மற்றும் ஆ
விடை: ஈ) அ மற்றும் ஆ
2) ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _
அ) இயல்பு நவிற்சி அணி ஆ) தன்மை நவிற்சி அணி
இ) உயர்வு நவிற்சி அணி ஈ) அ மற்றும் ஆ
விடை: இ) உயர்வு நவிற்சி அணி
3) “தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” – என்ற பாடல் எந்த அணிக்கான எடுத்துக்காட்டு
அ) இயல்பு நவிற்சி அணி ஆ) உவமை அணி
இ) சிலேடை அணி ஈ) வஞ்சப் புகழ்ச்சி அணி
விடை: அ) இயல்பு நவிற்சி அணி
4) ‘மயில் போல ஆடினாள்’ – என்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி
அ) இயல்பு நவிற்சி அணி ஆ) உவமை அணி
இ) எடுத்துக்காட்டு அணி ஈ) இல்பொருள் உவமையணி
விடை: ஆ) உவமை அணி
5) உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வருவது _
அ) உவமை அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி இ) இல்பொருள் உவமையணி ஈ) உருவக அணி
விடை: ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
6) “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” – என்ற திருக்குறளில் பயின்று வரும் அணி
அ) உவமை அணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) இல்பொருள் உவமையணி ஈ) உருவக அணி
விடை: ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
7) ‘கொம்பு முளைத்த குதிரை போல’ – என்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி
அ) உவமை அணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) இல்பொருள் உவமையணி ஈ) உருவக அணி
விடை: இ) இல்பொருள் உவமையணி
8) கூற்றினை ஆராய்க:
1. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமையணி
2. ‘பொன் மழை பொழிந்தது போல்’ – என்பது இல்பொருள் உவமையணிக்கு எடுத்துக்காட்டாகும்
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: இ) இரண்டும் சரி
9) ” அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” என்ற தொடரில் பயின்று வரும் அணி
அ) ஏகதேச உருவக அணி ஆ) உவமை அணி
இ) இல்பொருள் உவமை அணி ஈ) உருவக அணி
விடை: ஆ) உவமை அணி
10) ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது
_
அ) ஏகதேச உருவக அணி ஆ) உவமை அணி
இ) இல்பொருள் உவமை அணி ஈ) உருவக அணி
விடை: ஆ) உவமை அணி
11) உருவக அணிக்கான எடுத்துக்காட்டு அல்லாதவற்றை தேர்ந்தெடு
அ) தமிழ்த்தேன் ஆ) துன்பக்கடல்
இ) மலர்முகம் ஈ) இன்ப வெள்ளம்
விடை: இ) மலர்முகம்
12) உவனை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது _
அ) ஏகதேச உருவக அணி ஆ) உவமை அணி
இ) இல்பொருள் உவமை அணி ஈ) உருவக அணி
விடை: ஈ) உருவக அணி
13) “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” – என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) ஏகதேச உருவக அணி ஆ) உவமை அணி
இ) இல்பொருள் உவமை அணி ஈ) உருவக அணி
விடை: அ) ஏகதேச உருவக அணி
14) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” – என்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி
அ) உருவக அணி ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிது மொழிதல் அணி ஈ) உவமையணி
விடை: அ) உருவக அணி
15) கீழ்கண்டவற்றுள் உவமை அணி பயின்று வராத குறளினைத் தேர்ந்தெடு
அ) வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று
ஆ) சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து கோடாமை சான்றோர்க்கு அணி
இ) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
ஈ) கடல்ஓடா கால்வால் நெடுந்தேர் கடல்ஓடுத் நாவாயும் ஓடா நிலத்து
விடை: ஈ) கடல்ஓடா கால்வால் நெடுந்தேர் கடல்ஓடுத் நாவாயும் ஓடா நிலத்து
16) உவமையை மட்டும் கூறி அதன் ழூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது _
அ) உருவக அணி ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிது மொழிதல் அணி ஈ) வேற்றுமை அணி
விடை: இ) பிறிது மொழிதல் அணி
17) இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது _
அ) உருவக அணி ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிது மொழிதல் அணி ஈ) வேற்றுமை அணி
விடை: ஈ) வேற்றுமை அணி
18) ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது _
அ) இரட்டுற மொழிதல் அணி ஆ) சிலேடை அணி
இ) வேற்றுமை அணி ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
விடை: ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
19) “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” – இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி _
அ) உருவக அணி ஆ) வேற்றுமை அணி இ) ஏகதேச உருவக அணி ஈ) சிலேடை அணி
விடை: ஆ) வேற்றுமை அணி
20) பிறிது மொழிதல் அணியில் _ மட்டும் இடம்பெறும்
அ) உவமை ஆ) உவமேயம்
இ) தொடை ஈ) சந்தம்
விடை: அ) உவமை
21) இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் _ அணி
அ) பிறிது மொழிதல் அணி ஆ) வேற்றுமை
இ) உவமை ஈ) சிலேடை
விடை: ஈ) சிலேடை
22) “கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை” – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி _
அ) சொல் பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி
விடை: ஆ) பொருள் பின்வருநிலையணி
23) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று –
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி _
அ) உருவக அணி ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிது மொழிதல் அணி ஈ) உவமையணி
விடை: ஈ) உவமையணி
24) உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது
அ) உவமையணி ஆ) உருவக அணி
இ) வஞ்சிப்புழ்ச்சியணி ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
விடை: ஆ) உருவக அணி
25) ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதல் _
அ) உவமையணி ஆ) சிலேடை அணி
இ) பின்வருநிலையணி ஈ) வஞ்சப்புகழ்ச்சி அணி
விடை: இ) பின்வருநிலையணி
26) செய்யுளில் முன் வந்த பொருளே பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _
அ) சொல் பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) உருவக அணி
விடை: ஆ) பொருள் பின்வருநிலையணி
27) புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் _ அணி
அ) உவமையணி ஆ) உருவக அணி
இ) வஞ்சப்புகழ்ச்சியணி ஈ) ஏகதேச உருவக அணி
விடை: இ) வஞ்சப்புகழ்ச்சியணி
28) “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு”
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) சொல்பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) வஞ்சிப் புகழ்ச்சியணி
விடை: இ) சொற்பொருள் பின்வருநிலையணி
29) பின்வரும் கூற்றினை ஆராய்க
1. அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – இந்த செய்யுளில் சொல்பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது.
2. தேவரனையர் கயவர் அவருந்தாம் – என்ற குறளில் வஞ்சப் புகழ்ச்சியிணி பயின்று வந்துள்ளது.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: 2 மட்டும் சரி
30) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு” – என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) சொல்பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) வஞ்சிப் புகழ்ச்சியணி
விடை: அ) சொல்பின்வருநிலையணி
31) பொருத்துக
1. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் –
சொற்பொருள் பின்வருநிலையணி
2. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் –
ஏகதேச உருவக அணி
3. சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெயதிரீ இயற்று – உவமையணி
அ) 231 ஆ) 312 இ) 123 ஈ) 132
விடை: இ) 123
32) பின்வருவனவற்றுள் ஏகதேச உருவக அணி பயின்று வராத குறளைக் கண்டுபிடி
அ) அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்
ஆ) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப் பட்டார்
இ) உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
ஈ) சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
விடை: ஈ) சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
33) பண்என்னாம் பாடற் கிளைபின்றேல்: கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) உவமையணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) ஏகதேச உருவக அணி ஈ) உருவக அணி
விடை: ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
34) பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) சொல்பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) வேற்றுமை அணி
விடை: இ) சொற்பொருள் பின்வருநிலையணி
35) மக்களே போல்வர் கயவர்: அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) எடுத்துக்காட்டு உவமையணி ஆ) உவமையணி
இ) வஞ்சிப் புகழ்ச்சியணி ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
விடை: ஆ) உவமையணி
36) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) எடுத்துக்காட்டு உவமையணி ஆ) உவமையணி
இ) ஏகதேச உருவக அணி ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
விடை: ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
37) வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) உருவகம்
இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) தீவகம்
விடை: ஆ) உருவகம்
38) இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
அ) உவமையணி ஆ) உருவகஅணி
இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) தீவக அணி
விடை: இ) தற்குறிப்பேற்ற அணி
39) தன்மையணியின் வகைகள் _
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
விடை: இ) 4
40) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) நிரல்நிறை அணி ஆ) தன்மையணி
இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) தீவக அணி
விடை: அ) நிரல்நிறை அணி
41) தன்மையனியின் 4 வகைகள் அடங்காததைத் தேர்ந்தெடு:
அ) பொருள் தன்மையணி ஆ) குணத்தன்மையணி
இ) காலத் தன்மையணி ஈ) சாதித் தன்மையணி
விடை: இ) காலத் தன்மையணி
42) “சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெல் வேந்தர்” – என்ற பாடலில் வெளிப்படும் அணி
அ) உவமையணி ஆ) உருவக அணி
இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) தீவக அணி
விடை: ஈ) தீவக அணி
43) தீவக அணியின் வகைகள் _
அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6
விடை: அ) 3
44) “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்து கை காட்ட”- என்ற செய்யுளில் பயின்று வந்துள்ள அணி
அ) உவமையணி ஆ) உருவக அணி
இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) தீவக அணி
விடை: இ) தற்குறிப்பேற்ற அணி
45) ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது
அ) தற்குறிப்பேற்ற அணி ஆ) உவமையணி
இ) உருவக அணி ஈ) இரட்டுற மொழிதல் அணி
விடை: ஈ) இரட்டுற மொழிதல் அணி
46) ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்னும் திருக்குறளில் பயின்று வரும் அணி
அ) எடுத்துகாட்டு உவமையணி ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) இல்பொருள் உவமையணி ஈ) வேற்றுப் பொருள் வைப்பணி
விடை: அ) எடுத்துகாட்டு உவமையணி
47) ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக’ என்னும் குறட்பாவில் அமைந்துள்ள மோனை
அ) ஒரூஉ மோனை ஆ) பொழிப்பு மோனை
இ) கூழை மோனை ஈ) முற்று மோனை
விடை: ஈ) முற்று மோனை
48) அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எழுதுக
அ) எதுகை மட்டும் வந்துள்ளது
ஆ) எதுகையும் மோனையும் வந்துள்ளது
இ) எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
ஈ) மோனை மட்டும் வந்துள்ளது
விடை: ஈ) மோனை மட்டும் வந்துள்ளது
49) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக் கொண்டற்று – இதில் அமைந்து வரும் மோனை
அ) இணை மோனை ஆ) பொழிப்பு மோனை
இ) ஒரூஉ மோனை ஈ) கூழை மோனை
விடை: ஆ) பொழிப்பு மோனை
50) இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் – இதில் அமைந்து வரும் தொடை நயம்
அ) அடி முரண் தொடை ஆ) அடிமோனைத் தொடை இ) அடி இயைபுத் தொடை ஈ) எதுவுமில்லை
விடை: அ) அடி முரண் தொடை
51) ” தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்” இக்குறளில் இடம் பெற்றுள்ள சீர் மோனை
அ) கீழ்க்கதுவாய் மோனை ஆ) கூழை மோனை இ) ஒரூஉ மோனை ஈ) மேற்கதுவாய் மோனை
விடை: ஆ) கூழை மோனை
52) கலைச்சொற்கள் – தமிழாக்கம்
1) நுனவைழசயைட – செய்தித்தாள் வடிவமைப்பு
2) டீரடடநவin – தலையங்கம்
3) புசநநn pசழழக – சிறப்புச் செய்தி இதழ்
4) டுயலழரவ – திருத்தப்படாத அச்சுப்படி
அ) 4213 ஆ) 2341 இ) 3124 ஈ) 1432
விடை: ஆ) 2341
53) சந்திபிழையற்ற தொடரைக் கண்டறிக
அ) இசை தமிழில் வழி நாடகத்தமிழிற்கு இயக்கவில்லை
ஆ) இசை தமிழில் வழி நாடகதமிழிற்கு இயக்கவில்லை
இ) இசை தமிழில் வழி நாடகதமிழிற்கு இயக்கமில்லை
ஈ) இசைத் தமிழில் வழி நாடகமிழிற்கு இயக்கமில்லை
விடை: ஈ) இசைத் தமிழில் வழி நாடகமிழிற்கு இயக்கமில்லை
54) பொருத்துக
1) உருபன் – Excavation
2) ஒலியன் – Phoneme
3) அகழாய்வு – Epigraphy
4) கல்வெட்டியல் – Morpheme
அ) 4321 ஆ) 3412 இ) 2143 ஈ) 4213
விடை: ஈ) 4213
55) ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது
அ) பகுபதம் ஆ) தனிமொழி
இ) தொடர் மொழி ஈ) ஓரெழுத்து ஒரு மொழி
விடை: ஆ) தனிமொழி
56) பிழையற்ற வாக்கியம் எது?
அ) வருவதும் போவதும் கிடையா
ஆ) வருவதும் போவதும் கிடையாது
இ) வருவதும் போவதும் கிடையது
ஈ) வருவதும் போவதும் கிடையாயது
விடை: அ) வருவதும் போவதும் கிடையா
57) நான் வாங்கிய நூல் இது அல்ல- ஒருமை பன்மை பிழை நீக்கி எழுது
அ) நான் வாங்கிய நூல் இது அன்று
ஆ) நான் வாங்கியது இது நூல் அல்ல
இ) நான் வாங்கியவை நூல் இது அல்ல
ஈ) நான் வாங்கிய நூல்கள் இது அல்ல
விடை: அ) நான் வாங்கிய நூல் இது அன்று
58) கீழ்க்கண்டவற்றுள் கூற்றினை ஆராய்க
1) ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர்
2) தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டும்
3) படர்க்கை இடத்தில் மட்டும் வரும்
அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு ஈ) அனைத்தும் தவறு
விடை: ஆ) 2 மட்டும் தவறு
59) பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
அ) பேறு ஆ) தரு இ) விடு ஈ) எழுதல்
விடை: அ) பேறு
60) பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
அ) எழுது ஆ) பாடு இ) நடத்தல் ஈ) நடி
விடை: இ) நடத்தல்
61) பொருத்துக
1) வாழ்க்கை – முதனிலைத் தொழிற்பெயர்
2) விழு – முதனிலை திரிந்த தொழிற்பெயர்
3) சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்
அ) 213 ஆ) 312 இ) 321 ஈ) 123
விடை: ஆ) 312
62) கலைச் சொற்கள் – தமிழாக்கம்
1) படைப்பாளர் – Inscriptions
2) கல்வெட்டு – Cartoon
3) கருத்துப்படம் – Creator
4) அழகியல் – Aesthetics
அ) 1234 ஆ) 3124 இ) 2134 ஈ) 4123
விடை: ஆ) 3124
63) பொருத்துக
சொல் – பொருள்
1) புயல் – Marine Creature
2) கடல் வாழ் உயிரினம் – Storm
3) நீர்மூழ்கிக் கப்பல் – Submarine
4) மாலுமி – Sailor
அ) 2134 ஆ) 1234 இ) 3124 ஈ) 4123
விடை: அ) 2134
64) பொருத்துக
சொல் – பொருள்
1) தேநீர் – மூன்று நாள்
2) முந்நாள் – தேன் போலும் இனிய நீர்
3) தேனீர் – முந்தைய நாள்
4) முன்னாள் – தேயிலை நீர்
அ) 4321 ஆ) 4123 இ) 2341 ஈ) 3412
விடை: ஆ) 4123
65) தவறான மரபுச் சொல்லைத் தேர்வு செய்
அ) மாம்பிஞ்சு – மாவடு
ஆ) இளந்தேங்காய் – வழுக்கை
இ) வாழைப்பிஞ்சு – வாழைக்கச்சல்
ஈ) முருங்கைப்பிஞ்சு – முருங்கை மொட்டு
விடை: ஈ) முருங்கைப்பிஞ்சு – முருங்கை மொட்டு
66) ‘தை’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ) தொடுத்தல் ஆ) ஆடல்
இ) திங்களின் பெயர் ஈ) கொடு
விடை: இ) திங்களின் பெயர்
67) பிழையற்ற வாக்கியத்தைக் கூறு
அ) வயலில் மாடுகள் மேய்ந்தது ஆ) வயலில் மாடுகள் மேஞ்சது இ) வயலில் மாடுகள் மேய்ந்தன ஈ) வயலில் மாடுகள் மேய்ந்தது
விடை: இ) வயலில் மாடுகள் மேய்ந்தன
68) பொருத்துக
1) குசைளவ னநளநசஎநஇ வாநn னநளசைந – அடிமேல் அடித்தால் அம்மியும்
2) வுவை கழச வயவ – செய்யும் தொழிலே தெய்வம்
3) றுழசம ளை றழசளாip – முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா
4) டுவைவடந ளவசழமநள கநடட பசநயவ ழயமள- பழிக்குப் பழி
அ) 4321 ஆ) 4123 இ) 2341 ஈ) 3412
விடை: ஈ) 3412
69) உவமைத் தொடர்கள்
1) உடலும் உயிரும் போல
2) அச்சில் வார்த்தாற் போல
3) அணி வகுத்தாற் போல
4) வேம்பும் அரசும் போல
பின்வருவனவற்றுள் இத்தொடருக்குப் பொருத்தமானதைத் தேர்க
அ) ஒரே பொருளுடையன ஆ) 2,3,4- ஒரே பொருளுடையன இ) 1.2.3 மட்டும் ஒரே பொருளுடையன
ஈ) 1,2,4 மட்டும் ஒரே பொருளுடையன
விடை: ஈ) 1,2,4 மட்டும் ஒரே பொருளுடையன
70) வழுஉச் சொல்லற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
அ) வத்தல் அருகே கோடாரி இருந்தது
ஆ) வற்றல் அருகே கோடரி இருந்தது
இ) வற்றல் அருகே கோடாரி இருந்தது
ஈ) வலதுபக்கம் சீயக்காய் இருக்கிறது
விடை: ஆ) வற்றல் அருகே கோடரி இருந்தது
71) பொருந்தாத இணையைக் கண்டறி
அ) மதிமுகம் – முகமதி ஆ) கனிவாய் – வாய்க்கனி இ) முகப்பூ – பூ முகம் ஈ) மலரடி – அடிமலர்
விடை: இ) முகப்பூ – பூ முகம்
72) ‘பேடிகை வாளாண்மை போலக் கெடும்’ எது?
அ) அதிவேக முயற்சி ஆ) முயற்சியின்மை
இ) முயற்சி ஈ) அழியும்
விடை: ஆ) முயற்சியின்மை
73) சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க
அ) ஆந்தை கத்த கழுதை அலற கிளி கரைந்தது
ஆ) ஆந்தை அலற கழுதை கனைக்க கிளி கொஞ்சியது
இ) குதிரை கனைக்க குயில் கூவ சிங்கம் முழங்கியது
ஈ) புலி உறும மயில் அகவ யானை கத்தியது
விடை: இ) குதிரை கனைக்க குயில் கூவ சிங்கம் முழங்கியது
74) Gripe – என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைத் தேர்ந்தெடு
அ) சண்டையிடு ஆ) துன்புறுத்து
இ) பயமூட்டுகிற ஈ) பயங்கரமான
விடை: ஆ) துன்புறுத்து
75) பிறமொழிச் சொற்களற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க:
1) மேஸ்திரியிடம் அலமாரி ஜன்னல் சாவி
2) தலைமைத் தொழிலனிடம் நெடும்பேழை பபலகணி திறவுகோல்
3) பஜார் மைதானத்தில் ஜமக்காளம்
4) கடைத்தெரு திறந்தவெளித் திடலில் விரிப்பு
அ) 1 மற்றும் 3 ஆ) 2 மற்றும் 3
இ) 2 மற்றும் 4 ஈ) 1 மற்றும் 4
விடை: இ) 2 மற்றும் 4
76) வழூஉச் சொற்களற்ற வாக்கியங்கழளம் தேர்வு செய்க
1) அருவாமணையின் அருகில் அண்ணாக்கயிறு இருந்தது
2) அவரைக்காய் மற்றும் சிகைக்காய் வாங்கினேன்
3) தாழ்வாரத்தில் துடைப்பம் இருந்தது
4) நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்தி உழைத்தான்
அ) 1 மற்றும் 2 ஆ) 2 மற்றும் 3
இ) 3 மற்றும் 4 ஈ) 1 மற்றும் 4
விடை: அ) 1 மற்றும் 2
77) வேதனையில் சிக்குதல்
அ) கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல
ஆ) இஞ்சி தின்ற குரங்கு போல
இ) ஆப்பசைத்த குரங்கு போல
ஈ) உடும்புப் பிடி போல
விடை: இ) ஆப்பசைத்த குரங்கு போல
78) வினா வாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
அ) வினாப்பொருள் தரும் வாக்கியம்
ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
இ) ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வாக்கியம்
ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட துணை வாக்கியங்களுடன் சேர்ந்து வரும்
விடை: அ) வினாப்பொருள் தரும் வாக்கியம்
79) சரியான மரபுத் தொடரைத் தேர்வு செய்க
1) கற்குவியல் அருகே சாவிக் கொத்து கிடந்தது
2) கற்கூட்டம் அருகே சாவிக்குவியல் கிடந்தது
3) வேலங்காடு அருகே மாட்டு மந்தையைப் பார்த்தேன்
4) வேலங்காடு அருகே மாட்டுக் கூட்டத்தைப் பார்த்தேன்
அ) 1 மற்றும் 3 ஆ) 1 மற்றும் 4
இ) 2 மற்றும் 4 ஈ) 1 மற்றும் 2
விடை: அ) 1 மற்றும் 3
80) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை தேர்க
தலை – தளை
அ) முகம் – முதல்
ஆ) உறுப்பு – சுட்டு
இ) முடி – சேர்த்தல்
ஈ) காதுகள் – ஒருமை
விடை: ஆ) உறுப்பு – சுட்டு
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 அணி இலக்கணம் முக்கிய வினா-விடைகள் PDF பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

