📰 இனி அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக இனி அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களையும் நியமிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
📌 வாக்குச்சாவடி அலுவலர்கள் – யார் யார் நியமிக்கப்படலாம்?
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுவாக உள்ளூர் வாக்களர்களுக்கு பரிச்சயமான அரசு சார்ந்த பணியாளர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.
- 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு சார்ந்த உள்ளாட்சி மன்ற அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களில் சிலர்:
- ஆசிரியர்கள்
- அங்கன்வாடி பணியாளர்கள்
- கிராம நிர்வாக அலுவலர்கள்
- ஊராட்சி செயலாளர்கள்
- மின்கட்டண பட்டியல் தயாரிப்பவர்கள்
- அஞ்சல் பணியாளர்கள்
- துணை செவிலியர், பேறுகால உதவியாளர்
- சுகாதாரப் பணியாளர்கள்
- மதிய உணவு பணியாளர்கள்
- ஒப்பந்த ஆசிரியர்கள்
- மாநகராட்சி வரித்தண்டலர்கள்
📝 புதிய அறிவுறுத்தல்
- இனி ஆசிரியர்களுடன் நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்படலாம்.
- ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிரந்தர பணியாளர்கள் தேர்தல் பணிக்கு வர முடியாத சூழலில், மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள் நியமிக்கப்படலாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
📢 இதன் மூலம், எதிர்கால தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
🔔 தினசரி வேலைவாய்ப்பு & செய்திகள் அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram Follow: https://t.me/jobs_and_notes
👉 Instagram Updates: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நம்மை ஆதரிக்க நன்கொடை வழங்க:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

