Sunday, April 20, 2025
HomeBlogஅமேசான் இலவச ஸ்மார்ட்போன் - போலியான வாட்ஸ்அப் Message - அமேசான் எச்சரிக்கை
- Advertisment -

அமேசான் இலவச ஸ்மார்ட்போன் – போலியான வாட்ஸ்அப் Message – அமேசான் எச்சரிக்கை

 

அமேசான் இலவச
ஸ்மார்ட்போன்
போலியான வாட்ஸ்அப் Messageஅமேசான்
எச்சரிக்கை

ஆன்லைன்
வர்த்தக நிறுவனமான அமேசான்
தொடர்பான ஒரு போலி
வைரல் மெசேஜ், மெசேஜிங்
பயன்பாடான வாட்ஸ்அப்பில் வலம்
வந்து கொண்டிருக்கிறது. அந்த
போலியான மெசேஜின்படி, அதன்
30-
வது ஆண்டு விழாவை
முன்னிட்டு பயனர்களுக்கு பரிசுகளை
அமேசான் வழங்கப்போவதாக அந்த
மெசேஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள்
இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அமேசான் பக்கத்தைப் போல
தோற்றமளிக்கும் ஒரு
வலைப்பக்கத்தில், வாழ்த்துக்கள் என்று ஒரு உரையை
நீங்கள் காணலாம், மேலும்
விரிவான செய்தியுடன் அமேசான்
ஹவாய் மேட் 40 ப்ரோ
5
ஜி ஸ்மார்ட்போன் போன்ற
பரிசுகளை நூறு பயனர்களுக்கு அளிக்கப்போவதாக அதில்
தெரிவிக்கப்பட்டிருக்கும்.

பாலினம்,
வயது, அமேசான் சேவையின்
தரம் மற்றும் நபர்
பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் இயங்குதளம் ஆகிய நான்கு
கேள்விகளையும் அந்த
தளம் கேட்கிறது. அதையெல்லாம் கொடுத்த பிறகு இதை
மேலும் பலருக்கு பகிருமாறும் கூறுகிறது.

ஆனால்,
இந்த செய்தி போலியானது
மற்றும் பயனர்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது
போன்ற போலி செய்திகளிலிருந்து விலகி இருக்குமாறும் அமேசான் எச்சரித்துள்ளது.

இதுபோன்ற
செய்திகள் பொதுவாக பயனர்களின் தகவல்களைத் திருடி அவர்களின்
மின்னணு சாதனங்களை ஹேக்
செய்ய பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள்
கொடுக்கும் தகவல்கள் உங்களின்
அடையாள திருட்டுக்கு வழிவகுக்கலாம்.

வாட்ஸ்அப்பில் இதுபோன்ற போலி செய்திகளை
மக்கள் பெறுவது இது
முதல் முறை அல்ல.
இதுபோன்ற போலி மெசேஜ்களால் உலகெங்கிலும் உள்ள
மில்லியன் கணக்கான பயனர்கள்
ஏமாற்றப்பட்டுள்ளனர். கடந்த
காலங்களில் இதேபோன்ற செய்திகள்
வாட்ஸ்அப்பில் வலம்
வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால்,
இப்போது முன்னெச்சரிக்கையாக இது
போன்ற மெசேஜ்களை நீங்கள்
பார்க்க நேர்ந்தால் அதில்
உள்ள URL. Click
செய்யக்கூடாது என்பதை
நினைவில் கொள்ளுங்கள். இதை
வேறு யாருக்கும் நீங்கள்
பகிரவும் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -