விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண்ணை
எடுத்துச் செல்ல அனுமதி
மதுரை
மாவட்ட கண்மாய்களில் இருந்து
விவசாய பணிகளுக்காக வண்டல்
மண்ணை இலவசமாக எடுத்துச்
செல்ல கலெக்டர் அனீஷ்சேகர் அனுமதி அளித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
கண்மாய்களில் மண் எடுக்க விண்ணப்பிப்போரின் வசிப்பிடம் அல்லது
நிலம் உள்ள கிராமம்,
வண்டல் மண் எடுத்துச்
செல்ல வேண்டிய கண்மாய்,
குளம் அமைந்துள்ள கிராமம்
ஆகியவை அதே கிராமம்
அல்லது அருகில் உள்ள
கிராமத்திற்குள் இருக்க
வேண்டும். மனுதாரர் நிலம்
அல்லது குத்தகைக்கு பெற்ற
நிலம் என்பதற்கான விவரம்,
அதன் விஸ்தீரணம் பற்றி
வி.ஏ.ஓ.,விடம்
சான்று பெற வேண்டும்.
நஞ்சை
நிலம் எனில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர்
லோடுகள், புஞ்சை நிலம்
எனில் ஏக்கருக்கு 90 கனமீட்டர்
அல்லது 30 டிராக்டர் லோடுகள்
வழங்கப்படும்.கலெக்டரின் முன்அனுமதி பெற்றே எடுத்துச்
செல்ல வேண்டும். அனுமதி
20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். மண் எடுக்க வரும்போது
பொதுப்பணித்துறை அல்லது
ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்
மூலம் வாகனத்தில் ஏற்றி
விடப்படும்.
இதற்கான
கட்டணத்தை செயற்பொறியாளர் பெயருக்கு
அரசு கணக்கில் செலுத்த
வேண்டும்.கண்மாயில் உள்ளது
வண்டல் மண்தான் என்பதற்கான ஆய்வு அறிக்கையை பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் பெற்று இருக்க
வேண்டும். வண்டல் மண்
எடுக்க கலெக்டர் அனுமதியை
பெற்றதும், சம்பந்தப்பட்ட தாசில்தாருடன் ஒப்பந்தம் செய்த பின்பே
மண் எடுக்க அனுமதிக்கப்படுவர்.