PF வாடிக்கையாளர்கள் இருப்பு
தொகையை ஆன்லைனில் அறிந்து
கொள்ள வழிமுறை
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி
கணக்கு பற்றி அறிந்து
கொள்ள செயலி ஒன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி
ஊழியர்கள் UMANG
App,
சேவா போர்டல், எஸ்எம்எஸ்,
மிஸ்டு கால் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
அரசின்
சேவைகளை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் உமாங்
ஆப்பில் EPF பாஸ் மூலம்
தொழிலாளர்களின் இருப்பினை
தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் Unified Portalக்கு
பதிலாக www.epfindia.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் தொழிலாளர்களின் வைப்பு
நிதி பற்றி அறிந்து
கொள்ள முடியும்.
EPFO மூலம் பெற்றுக்கொள்ள,
www.epfindia.gov.in இணையதளத்தில் Our Services என்பதை Click
செய்ய வேண்டும்.
பிறகு
For Employees என்ற ஆப்ஷனை Click
செய்யவேண்டும்.
பிறகு
Member Pass Book என்பதை Click செய்யவும்.
அல்லது உங்கள் UAN எண்ணை
பதிவு செய்து பாஸ்வேர்டை கொடுத்து லாகின் செய்து
கொள்ளவும்.
இதன்
மூலம் உங்கள் இருப்பு
தொகை பற்றிய விவரங்களை
தெரிந்து கொள்ளலாம்.
எஸ்எம்எஸ் மூலம் பெற்றுக்கொள்ள,
முதலில்
7738299899 என்ற எண்ணுக்கு SMS
அனுப்ப வேண்டும்.
தேவையான
மொழியை (ENG) தேர்வு செய்ய
வேண்டும்.
பிறகு
உங்கள் எண்ணுக்கு SMS
அனுப்பப்படும்.
மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ள,
முதலில்
UAN எண்ணில் உங்கள் வங்கி
கணக்கு, ஆதார், பான்
எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி
பார்த்துக் கொள்ளவும்.
UAN எண்ணில்
பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து 011-22901406 எண்ணிற்கு மிஸ்டு
கால் கொடுக்க வேண்டும்.
இதன்
மூலம் உங்கள் இருப்பு
தொகை பற்றிய விவரங்களை
தெரிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


