TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
விமான நிலைய வாடிக்கையாளர்
சேவை
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம் – விழுப்புரம்
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
இளைஞர்கள்
விமான
நிலைய
வாடிக்கையாளர்
சேவை
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டுவசதி
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
நிறுவனமானது
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
இளைஞர்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சியினை
வழங்கி
வருகிறது.தற்போது பி.டி.சி., ஏவியேஷன் அகடாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர்
சேவை
மற்றும்
அதன்
தொடர்புடைய
நிறுவனங்களில்
பணிபுரிய
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில்
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
இளைஞர்கள்
பயிற்சி
பெற
பிளஸ்
2 தேர்ச்சி
பெற்றவர்களும்,
பட்டயப்படிப்பில்
தேர்ச்சி
பெற்றவர்களும்
18 வயது
முதல்
25 வயது
உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
கால
அளவு
மூன்று
மாதமும்
விடுதியில்
தங்கி
படிக்க
வசதியும்,
பயிற்சிக்கான
மொத்த
செலவுத்
தொகையான
20,000 ரூபாயை
தாட்கோ
வழங்கும்.பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், அங்கீரிக்கப்பட்ட
தரச்சான்றிதழ்
வழங்கப்படும்.
பயிற்சி பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில்
பணிபுரிய
வேலைவாய்ப்பு
அளிக்கப்படும்.
இத்திட்டத்தில்
தகுதியுள்ளஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
தாட்கோ
இணையதளமான
www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.