கோவை: வேளாண் பல்கலையில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஒரு நாள் வேளாண் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 29ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்ட பயிற்சி, அக்., 5க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள், பட்டதாரிகள், இறுதியாண்டு மாணவர்கள் என, ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இதற்கு, 1,770 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயிற்சிக்கு, 20 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். மேலும், விபரங்களுக்கு, 99949 89417 / 95004 76626 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.