வேளாண் வளர்ச்சி
திட்டம் – ஊராட்சிகளில் சிறப்பு
முகாம்
அரசின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், ஊராட்சி அளவிலான சிறப்பு
முகாம், வரும், 10ம்
தேதி துவங்குகிறது.
தமிழக
அரசு, வேளாண்துறை தொடர்புடைய அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளை மேம்படுத்தும் வகையில்,
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை
அறிவித்தது.
திருப்பூர் மாவட்டத்தில், 50 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கிராம
ஊராட்சிகளை, தன்னிறைவு பெற்ற
ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில்,
அனைத்து துறைகளுடன் இணைந்து,
சிறப்பு முகாம் நடத்தப்பட
உள்ளது. மாவட்டத்தில், தேர்வாகியுள்ள, 50 ஊராட்சிகளில், 10ம்
தேதி முதல், அடுத்த
மாதம், 7ம் தேதி
வரை முகாம் நடக்க
உள்ளது.அவிநாசியில் ஆலத்துார்,
சேவூர், நம்பியாம்பாளையம், பழங்கரை,
பாப்பாங்குளம், புதுப்பாளையம், செம்பியநல்லுார் ஊராட்சிகள், தாராபுரத்தில் பொன்னாபுரம், முண்டுவெலம்பட்டி, தொப்பம்பட்டி, குடிமங்கலத்தில் அணிக்கடவு,
குடிமங்கலம், வாகத்தொழுவ, காங்கயத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, பாப்பினி, பரஞ்சேர்வழி, பொதியம்பாளையம் ஊராட்சிகள், குண்டடத்தில், எல்லம்பாளையம்புதுார், நந்தவனம்பாளையம், பெருமாள்பாளையம், சடையபாளையம், சங்கராண்டம்பாளையம், சூரியநல்லுார், வடசின்னேரிபாளையத்தில் முகாம்
நடத்தப்பட உள்ளது.மடத்துக்குளத்தில், துங்காவி, மூலனுாரில், கிழாங்குண்டல், கொமரபாளையம், பொன்னிவாடி; பல்லடத்தில், கணபதிபாளையம், கரைப்புதுார், வடுகபாளையம்புதுார், பொங்கலுாரில், கண்டியன்கோவில், தெ.அவிநாசி பாளையம்,
தொங்குட்டிபாளையம், உகாயனுார்
ஊராட்சிகள், திருப்பூரில் முதலிபாளையம், வள்ளிபுரம், உடுமலையில், ஆண்டியகவுண்டனுார், ஜல்லிப்பட்டி, கல்லாபுரத்தில் முகாம் நடத்தப்பட உள்ளது.
ஊத்துக்குளியில், செங்கப்பள்ளி, சின்னேகவுண்டன்வலசு, கமலக்குட்டை, கவுண்டம்பாளையம், நடுப்பட்டி, சுண்டக்காம்பாளையம், விருமாண்டம்பாளையம் ஊராட்சிகள், வெள்ளகோவிலில், பச்சாபாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில் முகாம்
நடத்தப்பட உள்ளது. விவசாயிகள், முகாமில் பங்கேற்று, தங்களது
கோரிக்கையை முன்வைக்கலாம்.