HomeBlogஎள் சாகுபடியில் குறைந்த நாட்களில் கூடுதல் லாபம் பெற ஆலோசனை

எள் சாகுபடியில் குறைந்த நாட்களில் கூடுதல் லாபம் பெற ஆலோசனை

எள் சாகுபடியில் குறைந்த நாட்களில் கூடுதல்
லாபம் பெற ஆலோசனை

குறைந்த
நாட்களில் கூடுதல் லாபம்
பெற எள் சாகுபடி
செய்யலாம் என, வேளாண்
அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.

வேளாண் அலுவலர் சுப்பையா தெரிவித்தது:

எள்
சாகுபடி செய்தால் அடுத்த
பயிர் சரியாக வராது
என்பது தவறான கருத்து.
எள் சாகுபடியில் பொதுவாக
உரம் இடுவதில்லை. இதனால்
வயலில் ஏற்கனவே இருக்கும்
சத்துகளை எடுப்பதால் நிலத்தில்
சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. எண்ணெய் வித்துப் பயிர்களில் எள் மிகவும் முக்கியமான, பாரம்பரியமானது. தனி
அல்லது கலப்பு பயிராக
விதைக்கலாம்.

நிலத்தில்
எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியைத் தாங்கி வளரக்
கூடிய தன்மையுடையது.விதைகளை
விதை நேர்த்தி செய்வது
நல்லது. விதைத்த 3 நாள்
கழித்து உயிர் நீர்
விட வேண்டும். பின்னர்
15
ம் நாள் ஒருமுறையும், பூக்கும் தருணம் மற்றும்
காய் பிடிக்கும் தருணத்தில் ஒருமுறையும் நீர் பாய்ச்சினால் போதும்.

மண்ணின்
தன்மைக்கேற்ப உரம்
இடுவது நல்லது. தொடர்ச்சியாக நெல்லை சாகுபடி செய்யாமல்
எண்ணெய் வித்து பயிரை
சாகுபடி செய்வது சிறந்த
பயிற்சி முறையாகும். இதனால்
மண்ணின் தன்மை மேம்படுவதோடு நீர்ப்பிடிப்பு திறன்
அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular