HomeBlogராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன்

ராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன்

Admission to this year's student at the Army College

ராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், இந்திய
தேசிய ராணுவ கல்லுாரி
உள்ளது. இதில், 7ம்
வகுப்பு படிக்கும் அல்லது
7
ம் வகுப்பு முடித்துள்ள 11.5 வயது முதல்
13
வயது வரையான மாணவர்கள்
மட்டுமே சேர முடியும்.
இதுவரை, ராணுவ கல்லுாரி
நுழைவு தேர்வு மற்றும்
கல்லுாரியில் மாணவியர்
சேர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. அதை எதிர்த்து,
உச்ச நீதிமன்றத்தில் ஒரு
மாணவி வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின் போது, தேசிய ராணுவ
அகாடமியில் அடுத்த ஆண்டு
நுழைவு தேர்வு எழுத,
மாணவியருக்கு அனுமதி
வழங்க உள்ளதாக மத்திய
அரசு உறுதி அளித்தது.
அடுத்த ஆண்டு கல்லுாரியில் சேருவோருக்கு, இந்த
ஆண்டு டிசம்பரில் நடக்கும்
நுழைவு தேர்வுக்கே, மாணவியர்
பங்கேற்க அனுமதிக்க வேண்டும்
என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்
தொடர்ந்து, ராணுவ கல்லுாரி
படிப்பில் சேரும் நுழைவு
தேர்வுக்கு, இந்த ஆண்டே
மாணவியர் விண்ணப்பிக்கலாம் என
தேசிய ராணுவ கல்லுாரி
அறிவித்துள்ளது. வரும்
15
ம் தேதிக்குள் இதற்கான
விண்ணப்பத்தை பதிவு
செய்ய வேண்டும் என
மாணவர்கள் மற்றும் மாணவியர்
என இரு பாலருக்கும், அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழகத்தில் ராணுவ கல்லுாரியின் விண்ணப்பங்களை பெறும் நிறுவனமாக, அரசு
பணியாளர் தேர்வாணையமான, TNPSC.,
செயல்படுகிறது.

இதுகுறித்து, TNPSC வெளியிட்ட அறிவிப்பு:

அடுத்த
ஆண்டு ஜூலையில், ராணுவ
கல்லுாரி படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு டிச.,18ல்
நடக்கிறது. தேர்வு எழுத
உள்ளவர்கள், 2009 ஜூலை 2 முதல்
2011
ஜனவரி 1க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழக
மாணவர்களுக்கு, சென்னையில் மையம் அமைக்கப்படும்.ஆங்கிலம்,
கணிதம் மற்றும் பொது
அறிவு தொடர்பான மூன்று
தாள்களுக்கு தேர்வு நடக்கும்.
ஆங்கிலம் தவிர்த்த இரண்டு
தேர்வுகளும், ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே நடக்கும்.

தேர்வில்
பங்கேற்க விரும்பும் மாணவ
மாணவியர், தபால் வழியே
விண்ணப்பம் மற்றும் அதற்கான
கையேட்டை, ராணுவ கல்லுாரியில் இருந்து பெற்று கொள்ளலாம்.
TNPSC.ல் விண்ணப்பம் வழங்கப்படாது. வேறு
நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பம் செல்லாது. ராணுவ கல்லுாரியின், www.rimc.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்ப
கட்டணமாக, 600 ரூபாய் செலுத்த
வேண்டும்.

தமிழக
மாணவமாணவியர், பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்ப நகலுடன்,
நவ., 15க்குள் அரசு
பணியாளர் தேர்வாணைய தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி
அலுவலகத்தை அணுக வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!