சைனிக் பள்ளியில்
அட்மிஷன் – ஜன., 5ல்
நுழைவுத்தேர்வு
ராணுவ
அமைச்சகத்தின் கீழ்
செயல்படும், திருப்பூர் மாவட்டம்
உடுமலை அமராவதி நகர்
சைனிக் பள்ளியில், ஆறு
மற்றும் ஒன்பதாம் வகுப்பு
மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 – 2023ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு, 2022 ஜன.,
5ல் நடக்கிறது. விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக மட்டுமே
சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன்
பதிவு மற்றும் விண்ணப்ப
படிவத்தை சமர்ப்பிப்பது, செப்.,
27 முதல் துவங்கி உள்ளது.விண்ணப்பங்கள் பெறுவதற்கும், கட்டணம்
மற்றும் சேர்க்கை குறித்த
கூடுதல் விபரங்களுக்கும், https://aissee.nta.nic.in என்ற
இணையதள முகவரியில் பார்வையிடலாம். அக்., 26 வரை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.