தமிழகத்தில் 88 பொறியியல்
கல்லூரிகளில் மாணவர்கள்
சேர்க்கை ரத்து
நாட்டில்
தற்போது மிக அதிக
அளவிலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சில கல்லூரிகளில் மாணவர்கள்
சேர்க்கை குறைந்து வருவதால்
88 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள்
சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றைய
காலங்களில் மாணவர்கள் அனைவரும்
பள்ளி படிப்பை முடித்து
பொறியியல் படிப்பில் சேர்ந்து
வருகின்றனர். முந்தைய காலங்களில் பொறியியல் படிப்பை படிப்பவர்கள் காண அபூர்வமாக இருக்கும்.
ஆனால் தற்போது அனைவரும்
பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக
தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு
2 லட்ச பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளிவருகின்றனர். இதனால்
பலர் வேலைவாய்ப்பினை பெறுவதில்
சிக்கல் எழுந்து வருகிறது.
இதன்
எதிரொலியாக கடந்த 3 வருட
காலமாக 88 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு நிறுத்தப்பட்டது. அதில் சில கல்லூரிகளை சிபிஎஸ்சி பள்ளிகள் அல்லது
கலையறிவியல் கல்லூரிகளாக மாற்ற
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காரணம்
அதிக அளவில் கல்லூரிகள் திறக்கப்பட்டது தான்
என்று கல்வியாளர்கள் குற்றம்
சாட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.யு.
தரப்பில் இருந்து முறையான
திட்டம் எதுவுமில்லை
மேலும்
இதற்கு கல்லூரிகள் மீதான
கடன் அதிகரிப்பு மற்றும்
மோசமான மாணவர்கள் சேர்க்கை
இதற்கு காரணம் என்று
கூறப்படுகிறது. தனி
பல்கலைக்கழகத்தில் சுமார்
3000 மாணவர்களின் சேர்க்கை தேவைப்படுகிறது. இதன் எதிரொலியாக பொறியியல்
கல்லூரிகளின் செயல்பாடுகள் இயல்பாக இயங்க சிக்கல்
ஏற்பட்டது.