TAMIL MIXER
EDUCATION.ன்
சிவகங்கை
செய்திகள்
அழகப்பா கல்லூரியில் மாணவா் சேர்க்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக்கல்லூரியில்
2023-2024ம்
கல்வியாண்டின்
முதலாமாண்டு
இளநிலை
பட்டப்படிப்பு
மாணவா்
சேர்க்கைக்கான
கலந்தாய்வு
வருகிற
புதன்கிழமை
(மே
31) தொடங்கி
ஜூன்
3ம்
தேதி
வரை
நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருகிற புதன்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினரின்
குழந்தைகள்,
என்.சி.சி. மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு
என
சிறப்பு
ஒதுக்கீட்டில்
அனைத்து
இளநிலை
பாடப்
பிரிவுகளுக்கும்
கலந்தாய்வு
நடைபெறும்.
இதைத்தொடா்ந்து
வியாழக்கிழமை
(ஜூன்
1) பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல்
(பி.சி.ஏ), பி.எஸ்.சி., புவி அமைப்பியல் பாடப் பிரிவுகளுக்கும்,
வெள்ளிக்கிழமை
(ஜூன்
2) வணிகவியல்
(பி.காம்.), தொழில் நிர்வாகவியல்
(பி.பி.ஏ.) பாடப் பிரிவுகளுக்கும்,
சனிக்கிழமை
(ஜூன்
3) பி.ஏ.தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கும்
கலந்தாய்வு
நடைபெறும்.
கல்லூரியின் அழைப்புக் கடிதம் உள்ள மாணவா்கள் மட்டுமே கலந்தாய்வில்
கலந்துகொள்ள
இயலும்.
கலந்தாய்வுக்கு
வரும்
மாணவ,
மாணவிகள்
பெற்றோருடன்
தங்களின்
10,11, 12ம்
வகுப்பு
மதிப்பெண்
சான்றிதழ்கள்,
மாற்றுச்
சான்றிதழ்,
சாதிச்
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
வங்கி
கணக்குப்
புத்தகத்தின்
முதல்
பக்க
நகல்,
சிறப்புப்
பிரிவினராக
இருப்பின்
அதற்குரிய
அனைத்துச்
சான்றிதழ்களின்
அசல்,
இரண்டு
நகல்கள்,
நான்கு
மார்பளவு
புகைப்படங்களையும்,
விண்ணப்பத்தின்
அனைத்துப்
பக்கங்களின்
இரண்டு
நகல்களையும்
கொண்டு
வர
வேண்டும்.