HomeBlogதாட்கோ உதவித் திட்டங்களுக்கு ஆதிதிராவிடா்கள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ உதவித் திட்டங்களுக்கு ஆதிதிராவிடா்கள் விண்ணப்பிக்கலாம்

Adithravidas can apply for TADCO assistance schemes

தாட்கோ உதவித்
திட்டங்களுக்கு ஆதிதிராவிடா்கள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ
மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்
பல்வேறு உதவித் திட்டங்களுக்கு தகுதியுடைய ஆதிதிராவிடா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா்,
ராணிபேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் தாட்கோ மூலம் மகளிர்
நிலம் வாங்கும் திட்டம்,
நிலம் மேம்பாட்டுத் திட்டம்,
இளைஞா்களுக்கான சுய
வேலை வாய்ப்புத் திட்டம்,
மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு
மையம், ரத்த பரிசோதனை
நிலையம் அமைத்தல் ஆகிய
திட்டங்களின் கீழ்
பயன் பெற ஆதிதிராவிடா் இனத்தைச் சோந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விருப்பமுள்ளோர் குடும்ப ஆண்டு வருமானம்
ரூ.2 லட்சத்துக்குட்பட்டதற்கான சான்றிதழ்,
சாதி சான்றிதழ், குடும்ப
அட்டை, ஆதார் அட்டை,
புகைப்படம், விலைப் புள்ளி
(
ஜிஎஸ்டி எண்ணுடன்), திட்ட
அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் இணையத்தளத்தில் வருகிற
31-
ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல்
விவரங்களுக்கு மாவட்ட
மேலாளா், தாட்கோ, எண்.
153/1,
கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடா் மாணவா் விடுதி வளாகம்,
ஓட்டேரி, வேலூா் – 632 002 என்ற
முகவரியிலும், 94450 29483 என்ற
கைப்பேசி எண்ணிலும் தொடா்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!