HomeBlogதமிழகத்தில் NEET தேர்வுக்கு கூடுதல் மையங்கள்

தமிழகத்தில் NEET தேர்வுக்கு கூடுதல் மையங்கள்

 

தமிழகத்தில் NEET
தேர்வுக்கு கூடுதல் மையங்கள்

NEET
என்பது தேசிய தகுதி
மற்றும் நுழைவு சோதனை.
இந்தியாவில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ
படிப்புகளில் சேருவதற்கு NEET தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, தனியார், பல்
மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ்,
ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து
கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ்
படிப்புக்ளுக்கு இந்த
நீட் தேர்வின் மதிப்பெண்
மூலம் சேர்க்கை நடைபெறும்.
கடந்த 2020ம் ஆண்டு
16
லட்சம் பேர் NEET
தேர்விற்கு பதிவு செய்திருந்தனர்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் NEET
தேர்வுகள் ஆகஸ்ட் 1ம்
தேதி அன்று நடக்க
இருக்கிறது. தற்போது தமிழகத்தில் நீட் தேர்வுகளுக்காக மொத்தம்
28
தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும்
அமைக்கப்பட்டுள்ளது. NEET
தேர்வுகளுக்கான விண்ணப்ப
பதிவு தொடங்கிய மூன்று
மணி நேரங்களுக்குள் அனைத்து
தேர்வு மையங்களும் நிரம்பி
விட்டன. இதனால் பிற
மாணவர்கள் NEET தேர்வெழுத
மற்ற மாநிலங்களுக்கு செல்ல
வேண்டிய நிலை உள்ளது.
தற்போதுள்ள கொரோனா பரவல்
சூழ்நிலையில் மாணவர்கள்
பயணிப்பது பாதுகாப்பனதாக இருக்காது.

இதனால்
நடப்பு ஆண்டில் தேர்வு
மையங்களை அதிகரிக்க கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கு
விசாரணையின் போது NTA
சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விண்ணப்பிக்கும் மாணவர்கள்
தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு
மையங்கள் நிறைவடைந்து விட்டால்
மற்றவை என்று குறிப்பிட
வேண்டும். இதன் அடிப்படையில் பரிசீலித்து கூடுதல் தேர்வு
மையங்கள் ஒதுக்குவது குறித்து
முடிவெடுக்கப்படும். மேலும்,
நடப்பு ஆண்டில் கூடுதல்
தேர்வு மையங்கள் அமைக்கப்படா விட்டாலும், அடுத்த ஆண்டிலாவது கூடுதல் தேர்வு மையங்களை
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular