HomeBlogஅரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு பள்ளி
ஆசிரியர்கள் டியூசன் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் ஆதாய நோக்கில்
டியூசன் நடத்தினால் துறை
ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் அல்லது
தனியார் டியூசன் செண்டர்களில் மாணவர்களுக்கு பணம்
பெற்று டியூசன் நடத்துவது
சில இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்த வழக்கு ஒன்று
இன்று மதுரை கிளை
நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

இதை
விசாரித்த நீதிபதிகள் டியூஷன்
சென்டர்கள் மற்றும் வீடுகளில்
டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள் தெரிவிக்க தொலைபேசி
மற்றும் வாட்ஸ்அப் எண்
போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும்.

அரசுப்
பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம்,
கற்பிக்கும் விதம், கல்வித்தரம் குறித்து குறிப்பிட்ட கால
இடைவெளியில் மதிப்பீடு செய்து
மேம்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular