HomeBlogமாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை-முதல்வர் அறிவிப்பு

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை-முதல்வர் அறிவிப்பு

 

மாணவர்களின் கல்விக்
கடனை ரத்து செய்ய
நடவடிக்கைமுதல்வர் அறிவிப்பு

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து
செய்ய நடவடிக்கை என
முதல்வர் எடப்பாடி கே.
பழனிசாமி பேசினார்.

தமிழக
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அவிநாசி புதிய பேருந்து
நிலையம் அருகில் வியாழக்கிழமை காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்
பேசியது:

எம்ஜிஆர்,
ஜெயலலிதா அவர்களால் போடப்பட்ட
திட்டங்களால் தமிழகம்
ஏற்றமடைந்துள்ளது.

நீண்டகால
கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக அவிநாசி
பகுதி போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, முதல்வர்
ஜெயலலிதா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்குறுதி கொடுத்து
நிதியும் ஒதுக்கினார்கள். அந்த
வாக்கை நிறைவேற்றும் விதமாக
அத்திக்கடவு அவிநாச திட்டத்தை
மாநில அரசின் நிதி
மட்டும் கொண்டு ரூ.1652  கோடியில் அடிக்கல்
நாட்டிள்ளேன். முதல்வராக
தொடர்ந்து வந்து திட்டத்தையும் துவக்கி வைப்பேன்.

விவசாயிகளின் கோரிக்கையான ஏரி, குளங்கள்
தூர்வார, குடிமராமத்து பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது
மக்களின் சிரமங்களைக் குறைக்க
இப்பகுதியில் 4 அம்மா
கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. ஏழை
எளிய மக்களுக்காக கிராமப்புறங்களில் கான்கிரீட் வீடுகள்
நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துக்
கொடுக்கப்பட்டு வருகிறது.

அவிநாசி
பகுதியில் ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக அவிநாசியில் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர்
பிரச்னையை தீர்ப்பதற்காக ரூ.58.15
கோடியில் அன்னூர், அவிநாசி,
மோபிரி பாளையம் கூட்டு
குடிநீர் திட்டம், அதேபோல
ரூத.96 
கோடியில் சூலூர், அவிநாசி,
திருப்பூர் பகுதி கூட்டுக்
குடிநீர் திட்டம் மூலம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கப்பட்டு வருகிறது.

வாகன
நெருக்கடியை குறைக்கும் விதமாக
அவிநாசி மங்கலம் சாலையில்
ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 
விவசாயிகளின் துயரங்களை
துடைக்கும் வகையில் தற்போது
பயிர்க் கடன்கள் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. அதுவும்
10
நாள்களுக்குள் தள்ளுபடி
ரசீது வழங்கப்படும் என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்ட முதல்வர், மாணவர்களின் எதிர்காலம் தான் நாட்டின் எதிர்காலம் எனவே மாணவர்களின் கோரிக்கையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular