தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஏ.சி., குளிர்சாதனப்பெட்டி இலவச பழுது நீக்கும் பயிற்சி ஆக.,21 முதல் செப்.,26 வரை வழங்கப்பட உள்ளது.
வேலை இல்லாத 18 வயது நிரம்பிய கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில்துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகல் ஆகியவற்றோடு தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


