குளிரூட்டும் இயந்திரம் (ஏ.சி) மற்றும் குளிா்சாதனபெட்டி (பிரிட்ஜ்) பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு தொடா்பான இலவச பயிற்சி பெற, பெரம்பலூா் மாவட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், ஏ.சி மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்குதல், பராமரித்தல் தொடா்பான பயிற்சி ஆக. 12ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத த் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் ஐ.ஓ.பி வங்கி மாடியிலுள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குரிடம், தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, பான் காா்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, ஆக. 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அல்லது 04328–277896, 84890 65899, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.