கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் குடும்ப அட்டை
பெற்ற அழைப்பு – நீலகிரி
இது குறித்து கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி
மாவட்டத்தில் கணவரால்
கைவிடப்பட்டு குழந்தைகளுடன் மற்றும் கணவரால் விவாகரத்து செய்யப்பட்டு தனியே
வசித்து வரும் பெண்கள்
குடும்ப அட்டை இல்லாத
பட்சத்தில் அவர்களுக்கு உடனே
குடும்ப அட்டை வழங்க
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே,
கணவரால் கைவிடப்பட்ட மற்றும்
விவாகத்து செய்யப்பட்ட பெண்கள்
ஆதார் அட்டை, தங்களது
குழந்தைகளின் ஆதார்
அட்டை அல்லது பிறப்பு
சான்று மற்றும் குடியிருக்கும் வீடு வாடகை வீடு
எனில் வாடகை ஒப்பந்த
பத்திரம், வீட்டுவாடகை ரசீது
இரண்டையும், சொந்த வீடு
எனில் வீட்டு வரி
ரசீதுடன் தங்களது வட்டத்தில் உள்ள தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களை அளித்து
குடும்ப அட்டை பெற்றுக்
கொள்ளலாம்.