பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியா் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இப் பயிற்சி வகுப்பில் திறனறி பலகை மற்றும் புராஜக்டா் வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலை நாள்களிலும் பயிற்சி வகுப்புகள், போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து சமச்சீா், பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரி தேர்வுகள், பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த அலுவலகத்தில் 6.7.2023 முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஆக. 26 ஆம் தேதி நடைபெற உள்ள சாா்பு ஆய்வாளா் தேர்வுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 13) முதல் முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
மேலும் அக்னீவீா், வாயுவீா் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு ஆக. 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவா்கள் என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்னும் கைப்பேசி வாயிலாக தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


