திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நடைபெறும் ஆசிரியா் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு சுமாா் 6,553 பேரும், பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கு சுமாா் 3,587 பேரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த தகுதியான, ஆசிரியா் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்தவா்கள் ஆசிரியா் தகுதித் தோவை எழுதி பயனடையும் வகையில் நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்துகிறது.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கி வார நாள்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கக விரும்புவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.