
ஆகுபெயர் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உங்களுக்கு உதவிய அளவிற்கு ஆகுபெயர் பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த க்விஸ் மூலம், ஆகுபெயர் பற்றிய உங்கள் அறிவை சோதனை செய்து, உங்களுக்கு தேவைப்படும் பயிற்சி பெற முடியும்.
இந்த ஆகுபெயர் வினா-விடைகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான முக்கிய பகுதி ஆகும். நீங்கள் தமிழ் இலக்கணத்தில் சிறந்த தேர்வு பெற இந்த வினா-விடைகள் உதவியாக இருக்கும்.
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1) ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது __
அ) ஆகுப்பெயர் ஆ) எச்சம்
இ) வினைமுற்று ஈ) வேற்றுமை
விடை: அ) ஆகுப்பெயர்
2) பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது __
அ) பொருளாகு பெயர் ஆ) சினையாகு பெயர்
இ) பண்பாகு பெயர் ஈ) இடவாகு பெயர்
விடை: அ) பொருளாகு பெயர்
3) தலைக்கு ஒரு பழம் கொடு என்பது
அ) பொருளாகு பெயர் ஆ) இடவாகு பெயர்
இ) சினையாகு பெயர் ஈ) காலவாகு பெயர்
விடை: இ) சினையாகு பெயர்
4) திசம்பர் சூடினார் என்பது
அ) பொருளாகு பெயர் ஆ) இடவாகு பெயர்
இ) சினையாகு பெயர் ஈ) காலவாகு பெயர்
விடை: ஈ) காலவாகு பெயர்
5) முதலாகு பெயர் என அழைக்கப்படுவது __
அ) பொருளாகு பெயர் ஆ) இடவாகு பெயர்
இ) சினையாகு பெயர் ஈ) காலவாகு பெயர்
விடை: அ) பொருளாகு பெயர்
6) முல்லையைத் தொடுத்தான் என்பது
அ) இடவாகு பெயர் ஆ) முதலாகு பெயர்
இ) சினையாகு பெயர் ஈ) பண்பாகு பெயர்
விடை: ஆ) முதலாகு பெயர்
7) ஆகுப்பெயரின் வகைகள் __
அ) 6 ஆ) 8 இ) 10 ஈ) 16
விடை: ஈ) 16
8) வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது
அ) கருவியாகு பெயர் ஆ) காரியாகு பெயர்
இ) கருத்தாவாகு பெயர் ஈ) பண்பாகு பெயர்
விடை: அ) கருவியாகு பெயர்
9) குழல கேட்டு மகிழ்ந்தான் இது எவ்வகை ஆகுபெயர்
அ) கருவியாகு பெயர் ஆ) காரியாவாகு பெயர்
இ) கருத்தாவாகு பெயர் ஈ) தானியாகு பெயர்
விடை: ஆ) காரியாவாகு பெயர்
10) பொருத்தமற்றதை தேர்வு செய்
அ) மஞ்சள் பூசினாள் – பண்பாகு பெயர்
ஆ) கார் அறுத்தான் – காலவாகு பெயர்
இ) மருக் கொழுந்து நட்டான் – சினையாகு பெயர் ஈ) பைங்கூழ் வளர்ந்தது – தொழிலாகு பெயர்
விடை: ஈ) பைங்கூழ் வளர்ந்தது – தொழிலாகு பெயர்
11) தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர்
அ) கழல் பணிந்தான் ஆ) இளநீர் சீவினான்
இ) பாலை இறக்கினான் ஈ) மோர் குடித்தான்
விடை: ஈ) மோர் குடித்தான்
12) கூற்றினை ஆராய்க
1. நீட்டலளவை ஆகுபெயர் – ஐந்து மீட்டர் வெட்டினான்
2. எண்ணலளவை ஆகுபெயர் – இரண்டு கிலோ கொடு
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
விடை: அ) 1 மட்டும் சரி
13) அறிஞர் அண்ணாலைப் படித்திருக்கிறேன் – எள்பது எவ்வகை ஆகுபெயர்
அ) காரியாகு பெயர் ஆ) கருத்தாவாகு பெயர்
இ) முதலாகு பெயர் ஈ) பொருளாகு பெயர்
விடை: ஆ) கருத்தாவாகு பெயர்
14) வற்றல் தின்றான் – என்பது
அ) காரியாகு பெயர் ஆ) கருத்தாவாகு பெயர்
இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகு பெயர்
விடை: இ) தொழிலாகு பெயர்
15) இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது
அ) முதலாகு பெயர் ஆ) சினையாகு பெயர்
இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகு பெயர்
விடை: இ) தொழிலாகு பெயர்
16) பொருத்துக
1. நீட்டலளவை ஆகுபெயர் – ஐந்து மீட்டர் வெட்டினான்
2. முகத்தலளவை ஆகுபெயர் – அரை லிட்டர் வாங்கு
3. எடுத்தலளவை ஆகுபெயர் – ஒன்று பெற்றால் ஒளிமயம்
4. எண்ணலளவை ஆகுபெயர் – இரண்டு கிலோ கொடு
அ) 1234 ஆ) 1243 இ) 2143 ஈ)4213
விடை: ஆ) 1243
17) சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
அ) முதலாகு பெயர் ஆ) காலவாகு பெயர்
இ) இடவாகு பெயர் ஈ) தொழிலாகு பெயர்
விடை: இ) இடவாகு பெயர்
18) பொருந்தாததை கண்டறிந்து எழுது
அ) 5 கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர் ஆ) 4 லிட்டர் – முகத்தல் அளவை ஆகுபெயர்
இ) 3 மீட்டர் – நீட்டல் அளவை ஆகுபெயர் ஈ) இந்தியா வென்றது – உவமையாகு பெயர்
விடை: ஈ) இந்தியா வென்றது – உவமையாகு பெயர்
19) ” நாரதர் வருகிறார்” என்ற தொடர் என்ன ஆகுபெயர்
அ) காரியாகு பெயர் ஆ) கருத்தாவாகு பெயர்
இ) கருவியாகு பெயர் ஈ) உவமையாகு பெயர்
விடை: ஈ) உவமையாகு பெயர்
20) பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறுp ‘ஆகுபெயர்’
அ) உலகு சிறந்தது ஆ) விருந்து வந்தது
இ) வெற்றிலை நட்டான் ஈ) பழம் உண்டான்
விடை: ஈ) பழம் உண்டான்
சமூகம் மற்றும் பயிற்சி
இந்த ஆகுபெயர் வினா-விடைகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தேர்வு தயாரிப்பில் மிக முக்கியமான பயிற்சியாக இருக்கும். இவற்றை பழகி, உங்கள் தமிழ் இலக்கண அறிவை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 ஆகுபெயர் முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!