அரசு ஓய்வூதியதரர்களுக்கு ஆயுள் சான்றிதழ்
பெற ஆதார் எண்
கட்டாயமில்லை
அரசு
பணியில் இருந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு மாதம்
தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் பெற
ஆண்டு தோறும் தங்களது
ஆயுள் சான்றை அளிக்க
வேண்டும். அவ்வாறு அளிப்பதன்
மூலமாக அவர்களுக்கு தடையில்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படும். ஒவ்வொரு
ஆண்டும் ஆயுள் சான்று
பெற ஆதார் எண்ணை
தெரிவிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னணு முறையில் ஆயுள்
சான்று பெரும் முறையை
மத்திய மின்னணு தகவல்தொழில் நுட்பத் துறை அமைச்சகம்
வெளியிட்டது. மேலும் மின்னணு
முறையில் சான்று பெற
ஆதார் எண் கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதன்
காரணமாக கொரோனா காலத்தில்
வயதில் மூத்த ஓய்வூதியத்தார்கள் நேரில் வர
தேவையில்லை. ஏற்கனவே மின்னணு
முறையில் ஆயுள் சான்றிதழ்
பெற ஆதார் அட்டை
இல்லாதவர்களும், கைவிரல்
ரேகை சரியாக பதிவு
செய்ய முடியாதவர்களுக்கும் சிக்கல்
இருந்தது.
ஆனால்
தற்போது அது சரி
செய்யப்பட்டு ஓய்வூதியதாரர்கள் ஆதார் அல்லாத
வேறு அடையாள சான்றை
அளித்தால் போதும். மேலும்
அரசு அலுவலங்களில் வருகைப்பதிவு செய்ய மத்திய தகவல்
மையம் உருவாக்கிய சந்தோஷ்
செயலி உபயோகப்படுத்த வேண்டும்
எனவும் அதற்கும் ஆதார்
கட்டாயமில்லை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.