HomeBlogமார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டு கணக்கில் இணைக்க வேண்டும் - மந்திரி ஜன்தன் யோஜனா...
- Advertisment -

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டு கணக்கில் இணைக்க வேண்டும் – மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம்

Aadhar card must be linked to the account by March 31 - Minister Jantan Yojana

மார்ச் 31ம்
தேதிக்குள் ஆதார் கார்டு
கணக்கில் இணைக்க வேண்டும்மந்திரி ஜன்தன்
யோஜனா திட்டம்

நாட்டு
மக்கள் அனைவருக்கும் வங்கி
சேவைகள் கிடைக்க வேண்டும்
என்பதற்காக மத்திய அரசால்
பிரதான் மந்திரி ஜன்தன்
யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த
வங்கிக் கணக்கு வழியாக
பொது மக்களுக்கு நிறைய
உதவிகள் கிடைக்கிறது. அதைத்
தொடர்ந்து பெறவேண்டுமானால் மார்ச்
31
ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார்
கார்டு கணக்கில் இணைக்க
வேண்டும்.

ஜன்தன்
கணக்கில் ஆதார் எண்
இணைக்க வாடிக்கையாளர்களுக்கு 1.30 லட்சம்
வரையிலான சலுகைகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஜன்தன் யோஜனா திட்டம்
பயனாளிகளுக்கு விபத்து
காப்பீடாக ரூபாய் ஒரு
லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இந்த
உதவியை பெறுவதற்கு ஆதார்
கார்டு இணைத்திருக்க வேண்டும்.
மேலும் மரண விபத்து
காப்பீடாக 30 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை தனது
வாடிக்கையாளர்கள் சார்பாக
அவரது நாமினிக்கு வழங்கப்படுகிறது.

ஜன்
தன் கணக்கில் ஆதாரை
இணைப்பது சுலபமான காரியம்தான். வங்கிக் கணக்கு உள்ள
கிளையிலேயே சென்று ஆதாரை
இணைக்கலாம். இதற்கு ஆதார்
ஜெராக்ஸ் மற்றும் வங்கிக்
கணக்கு புத்தகத்தை எடுத்துச்
செல்ல வேண்டும். SMS மூலமாகவும் வங்கிக் கணக்குடன் ஆதாரை
இணைக்கும் வசதி உள்ளது.
உங்களுடைய மொபைல் நம்பரையும் ஆதார் நம்பரையும் 567676 என்ற
நம்பருக்கு UIDAadhaar numberaccount number என்ற
வடிவில் அனுப்ப வேண்டும்.

ஆதாரில்
இணைக்கப்பட்ட மொபைல்
நம்பரும் வங்கிக் கணக்கில்
வழங்கப்பட்ட மொபைல் நம்பரும்
ஒன்றாக இருக்க வேண்டும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆதாரை இணைப்பதற்கான கால
அவகாசம் முடிய இன்னும்
ஒரு வாரம் மட்டுமே
உள்ளது. அதற்குள் இணைப்பது
நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -