கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் 25.09.2023 (திங்கட்கிழமை) அன்று காலை 08.00 மணி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, மருத்துவக் கல்லுாரி, பயிற்சி கல்லுாரி, நர்சிங் கல்லுாரி மற்றும் மாநில, ஒன்றிய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லுாரி மாணவ, மாணவிகள் கல்விக்கடன் வழங்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12ஆம் வகுப்பு சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்லுாரி அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமானச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வருகை தர வேண்டும்.
மேலும் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு முகாம் நடக்கும் இடத்தில் இ-சேவை மையம் மூலம் பதிவு செய்து தரப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாரதி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


