சென்னை: சென்னை மாநில கல்லூரியில் வரும் 22ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக, சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதலாவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ, தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து வேலைநாடுநர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 044-20501032 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



athaullah355@gamil.com I