திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், தங்களது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் வர வேண்டும். இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் NELLAI EMPLOYMENT OFFICE
என்ற Telegram Channel-இல் இணைந்து பயன்பெறலாம். போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் (https://www.tnprivatejobs.tn.gov.in/) பதிவு செய்து அனைத்து போட்டித் தோ்வுக்கான பாடக் குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

