மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில், பெண்களும் பல பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதாவது, மத்திய அரசின் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெண்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் இந்த பயிற்சி மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வழிவகை செய்யும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.