
பிளஸ் 1 மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தமிழக முதல்வரின் திறனாய்வுத் தோ்வுக்கு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 2024 -25 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 21 இல் நடைபெறும் தமிழக முதல்வரின் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் (ஒரு கல்வியாண்டுக்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். இத்தோ்வுக்கு வரும் 26 ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் ஜூலை 14 முடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மற்ற நாள்களில் இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை மற்றும் தங்களது பெற்றோருடன் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளா் எஸ். சிவகுமாரை 63836 90730 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட மைய நூலகா் சு. தனலெட்சுமி தெரிவித்தாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

