
ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இளைஞா்களுக்கு வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜவுளித் தொழிலாளனது இந்தியப் ொருளாதாரத்தில் ஒரு உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித் துறைக்கு மிகப் ெரிய பங்கு உள்ளது.
நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதும் ஆகும். தமிழகத்தில் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தமிழ்நாடு அரசின் துணி நூல் துறையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஆண், பெண் ஆகியோருக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட உள்ளன.
இப்பயிற்சியினை பெற விரும்புபவா்கள் இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன் பெற வேண்டுமாறும் ஆட்சியரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா், ஜவுளித் துறை, 2-1. சங்ககரி பிரதான சாலை, குகை, சேலம் – 636 006 என்ற முகவரியிலும் மின்னஞ்சல் முகவரியிலும், 0427 – 291306 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

