HomeNewslatest newsஅரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
அரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும் முறையான இசைக்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அயல்நாடு மற்றும் நமது நாட்டிலும் இசை, நடனத்திற்கென ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளும் அனைத்து மாவட்ட மக்களுக்கும் சரிசமமாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மாவட்டம் தோறும் இசைப்பள்ளிகள் தமிழக அரசினால் தொடங்கப்பட்டது.

இப்பள்ளிகளில் ஏழை நடுத்தர வகுப்பு மாணவர்கள் இசை,நடனம் முறையான வழியில் தகுதியான ஆசிரியர்களிடம் பயிலுவதற்கு இசைப்பள்ளிகள் வாய்ப்பாக அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம். பரதநாட்டியம், வயலின். மிருந்தங்கம் ஆகிய துறைகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவுகளில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயது முதல் 25 வயது வரை குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருந்தங்கம் ஆகிய பிரிவுகளில் சேர கல்வி தகுதி ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாதசுரம், தவில், தேவாரம் சேருவதற்கு எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முடிந்தவுடன் அரசுத் தேர்வு நடத்தப்பட்டு அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும். சுய வேலைவாய்ப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்பிற்கு வழி வகுக்கும் கல்வியாகும்.

இதில் ஆண் பெண் இருபாலரும் சேரலாம். கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூ 350. பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை. அனைத்து மாணாக்கர்களுக்கும் கல்வி உதவி தொகை திங்கள்தோறும் ரூ 400/ வழங்கப்படும். இலவச பேருந்து சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயணச்சலுகை, இலவச பாடப்புத்தகம், அரசு விதிக்குட்பட்ட சலுகைகள் வழங்கப்படும்.

எனவே விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் சேருவதற்கு தலைமை ஆசிரியர். மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டுத் திடல், விழுப்புரம், தொலைபேசி எண்: 04146220178, 94444455750 என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!