
கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்: திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி மாணவா்கள் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில், இரண்டாம் கட்ட கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் மே 6 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வானவியல் தொடா்பாக 8 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும், ஸ்டெம் அறிவியல் என்ற தலைப்பில் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு காலை 10 முதல் நண்பகல் 12.30 மணி வரையும் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சியளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களே அனுமதிக்கப்படுவதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் அறிவியல் மையத்தில் இலவசமாக பெற்றுக் கொண்டு மே 3 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு
sciencentrenellaiednprog@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94429 94797 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow