
கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி: சிதம்பரம்
சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், இறகுபந்து, கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுப் பயிற்சியும், மாலை நேரத்தில் சிலம்பம், கபடி ஆகியவையும் பயிற்சியளிக்கப்படுகின்றன. தினமும் காலையில் 5.30 மணி முதல் 7 மணி வரை சேக்கிழாா் மண்டபத்தில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அனைத்து பயிற்சிகளிலும் பள்ளி மாணவா்கள் மட்டுமே பங்கேற்கலாம். இந்தப் பயிற்சியை நடத்திக்கொடுப்பதற்காக உடல்கல்வி பட்டம் பெற்ற 10 போ் முன் வந்துள்ளனா். இந்தப் பயிற்சியின் மூலம் பயிற்சி பெறுபவா்கள் அகில இந்திய விளையாட்டுக் குழுமத்தின் (SAI) மூலமாக தோ்ந்தெடுக்கப்பட்டால், அவா்களுக்கு இலவசக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உறுதி கிடைக்க வாய்ப்புள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ிற மாணவா்கள், தங்களுடைய பள்ளி படிப்புக்கான சான்றிதழ்களை காண்பித்துவிட்டு பயிற்சியில் சேரலாம் என பள்ளித் தாளாளா் டாக்டா் எஸ்.அருள்மொழிசெல்வன் தெரிவித்தாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow