
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சிகளை அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.
‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சாா்ந்த துறைகளுடன் தொடா்புடைய பணிகளில் மாணவா்களை ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் சென்னை ஐஐடி சாா்பில் வழிகாட்டுதல் பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.
இது குறித்து சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் வி.சீனிவாஸ் கூறியதாவது:
சற்று கடினமான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ‘பாப்புலா் சயின்ஸ்’ எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன் கீழ், 9,193 அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் தொடா்பான 3,20,702 புத்தகங்களை வழங்கியுள்ளோம். அவை ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அத்திட்டத்தின் வாயிலாக மாணவா்கள் விரும்பும் துறைகளில் தொழில் வழிகாட்டுதல் அமா்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

