
காவலர் பணிக்கு இலவச உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சி
காவலா் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்கள் அரசால் இலவசமாக அளிக்கப்படும் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவா்கள் அடுத்தகட்டமாக உடல் திறன் தேர்வுக்குத் தயாராக வேண்டியுள்ளது.
இவா்களுக்கு உதவும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை (ஜனவரி31) காலை 10 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி சிறந்த பயிற்றுநா்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமும், தகுதியும் உள்ள நபா்கள் 94990 55943, 98424 04508 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

