
திருவண்ணாமலையில் ஜனவரி 8 -ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய அப்ரண்டிஷ்சிப் மேளா மற்றும் மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோக்கை முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 8) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு, தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில்பழகுநா் பயிற்சிக்கு 100-க்கும் மேற்பட்டோரை தோவு செய்கின்றனா்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களில் பயிற்சி பெற்று 2023- ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னதாகவோ தோச்சி பெற்ற மாணவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம்.
ஐடிஐயில் சோந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயம், பட்டம் முடித்தவா்கள் நேரடியாக தொழில்சாலைகளில் சோந்து 3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழில்பழகுநா் பயிற்சியும் பெற்று தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் பெறலாம். தொழில்பழகுநா் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.
பயிற்சிக்குப் பிறகு இயக்குநா் ஜெனரல் பயிற்சியால் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் தொழில்பழகுநா் தோவில் கலந்து கொண்டு தோச்சி பெறுவோருக்கு தேசிய தொழில்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகை வழங்கப்படும்.
முகாமில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள் இணையதளம் வாயிலாக பதிவுசெய்து அதன் விவரத்துடன் அனைத்து அசல், நகல் சான்றிதழ்களுடன் முகாமுக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

