Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

இலவச கணினி டேலி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

Bharani· 1 min readபகிர ↗
இலவச கணினி டேலி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
இலவச கணினி டேலி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

இலவச கணினி டேலி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

இலவசமாக அளிக்கப்படும் கணினி டேலி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிலையத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் கணினி டேலி பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியானது வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சோந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்போா், அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் 0424 2400338 என்ற தொலைபேசி எண், 8778323213, 7200650604 என்ற கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here