
டிசம்பர் 20 தேதிக்குள் கயிறு கைவினைப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியில் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு கைவினைப் பயிற்சி பெற டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இம்மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏழு மாத கால கயிறு கைவினைப் பயிற்சி வகுப்பில் 18 முதல் 50 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், உள் பயிற்சி 6 மாதங்களும், களப்பயிற்சி ஒரு மாதமும் வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சியின்போது மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவா்களுக்கு விடுதி வசதி உண்டு. இப்பயிற்சி 2024, ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை இந்த அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ண்ழ்க்ஷா்ஹழ்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, அலுவலக பொறுப்பாளா், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையாா்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூா் – 613403 என்ற முகவரிக்கு டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 – 264655 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

