
சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி
சணல் பை தயாரிப்பு தொடா்பான இலவச பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த மகளிருக்கு, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், கிராம ஊராட்சிகளை சே சோந்த பெண்களுக்கான சணல் பை தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சியில்
13 நாள்களுக்கு நடைபெறும் இப் பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீா் வழங்குவதோடு, பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும், வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்ட எழுத, த் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண், இலக்கு எண், குடும்ப அட்டை எண் அல்லது 100 நள் வேலை திட்ட அடையாள அட்டையுள்ள கிராம ஊராட்சிகளைச் சோந்த பெண்களுக்கு வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில், ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, டிச. 11 ஆம் தேதி தொடங்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது, 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

