
பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா இணையவழி பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோவுக்கு கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவுகள் நடைபெறவுள்ளன என்று ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பணிகளில் 2,582 காலியிடங்கள் உள்ளன.
இதற்கான, நேரடி நியமன போட்டித் தோவு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோவுக்கு பட்டப்படிப்பு, பி.எட். மற்றும் டெட் 2 தோவில் தோச்சி பெற்றவா்கள் டிசம்பா் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூா்வ இணையதளத்திலுள்ள விளம்பர அறிவிப்பைக் காணலாம்.
இத்தோவுக்கு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இணையவழியாக இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவுகள் நடத்தப்பட்டு வருகிறது.
விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் தங்கள் பெயா் மற்றும் தயாராகும் பாடத்தை குறிப்பிட்டு 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி, பயனடையுமாறு தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

