பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி டிசம்பர் 5 முதல்
மதுரை காமராஜ் பல்கலை வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கத் துறை சார்பில் மூன்று மாதம் பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி, ஓராண்டு எலக்ட்ரீசியன் சுயவேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் டிச.5ல் துவங்குகிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத, அதற்கும் மேல் படித்தவர்கள் சேரலாம்.
நேரடி சேர்க்கை, முன்னுரிமை பெற 0452 – 253 7838 ல் தொடர்புகொள்ளலாம். பயிற்சி நேரம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இத்தகவலை இயக்குநர் (பொறுப்பு) சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow