
சர்வதேச இன்டர்ன்ஷிப் பயிற்சி: சென்னை ஐ.ஐ.டி. ஏற்பாடு
சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு கல்வியாண்டில், மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் என்ற உள்ளக தொழில் பழகுனர் பயிற்சிக்கு, சிறப்பு முகாமை, சென்னை ஐ.ஐ.டி., நடத்தியுள்ளது.
இதில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், ஜே.பி.மோர்கன் சேஸ் அண்ட் கோ, அடோப், பிராக்டர் அண்டு கேம்பிள், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள், அதிக மாணவர்களுக்கு தொழில் பழகுனர் வாய்ப்புகளை வழங்கியுள்ளன.மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், அதிக அளவில் வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
இதனால், ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு, படிக்கும்போதே சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களில், பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.கல்லுாரிகளில் படிக்கும்போதே திறமையை வெளிப்படுத்தவும், பாடங்களில் படித்ததை நடைமுறைப்படுத்தவும், இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

